இன்று மகா சிவராத்திரி – சிவன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்!!

0

இன்று நாடு முழுவதும் மகா சிவரித்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவிலுக்கு பகதர்கள் தரிசனத்திற்காக படையெடுத்துள்ளனர்.

மகா சிவராத்திரி:

ஒவ்வொரு முறையும் மகா சிவராத்திரி விழாவை ஹிந்துக்கள் மிக சிறப்பான முறையில் கொண்டாடி வருவார்கள். இந்த விழா ஹிந்துக்களின் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள சிவன் கோவிலில் பக்தர்கள் இன்று இரவு முதல் நாளை காலை வரை தரிசனத்திற்காக படை எடுத்து செல்வார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில்களிலும் இரவு முழுவதும் திறந்து வைத்து வழக்கம் போல் அபிஷேக, ஆராதனை வழிபாடு நடைபெறும். நாம் சிவா பெருமான், அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினத்தை தான் சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்லாமல் மகா சிவராத்திரி உருவான இடமாக கருதப்படும் திருவண்ணாமலையில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

விஜய் டெலிவிஷன் அவார்ட்டில் பரிவட்டம் யாருக்கு?? சித்ராவை நினைத்து கதறும் ரசிகர்கள்!!

சிவராத்திரியான இன்று காலை முதல் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு என அனைத்து பூஜைகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 12 மணி அளவில் சிவன் கோவிலுக்கு ஓடிச்சென்று வழிபடும் சிவாலய ஓட்டமும் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓடி வருகின்றனர். மேலும் தற்போது சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here