‘பாஜக ஆட்சியமைக்காத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்சனை தருகின்றனர்’ – மத்திய அரசின் மீது குற்றம் சாட்டும் மம்தா!!

0

தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை நடந்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சியமைக்காத மாநிலங்களில் பாஜக ஆளுநர்கள் மூலம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி:

மேற்கு வங்கத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் தேர்தல் என்றால் பல பிரச்சனைகள் நிலவி வரும். இந்நிலையில் மம்தாவிற்கு வேறு ஏற்கனவே அடிபட்டது. இதற்கு யார் காரணம் என்பது தொடர்ந்து மர்மமாக இருந்து வருகிறது. மேலும் தொடர்ந்து அங்குள்ள நந்திகிராமில் பதட்ட நிலை ஏற்பட்டதால் நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது பேசிய மம்தா பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அனைத்து மாநிலங்களையும் பாஜக அரசு நகராட்சியை போல் நடத்துவதற்கு எண்ணுகிறது. அதுமட்டுமல்லாமல் சிபிஐயை மத்திய அரசு அரசியல் வேலைகளுக்காக பயன்படுத்துகிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக கட்சி அமலாக்கத்துறை மூலம் பயமுறுத்த முயற்சிக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்கு முறைகேடால் உதவியாளர் அதிரடி கைது!!

ஒரே கட்சியின் ஆட்சிமுறையை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என்று பாஜக அரசு நினைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் அந்த மாநிலத்தின் ஆளுநர்கள் மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆளுநர்கள் அனைவரும் பாஜக கட்சி போல் செயல்படுகின்றனர் என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here