மீம்ஸ்களை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தேன் – மாளவிகா மோகனன் ட்வீட்!!

0

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்ஸ் பல மீம்களை தயாரித்து வருகின்றனர். தற்போது இதனை பார்த்த மாளவிகா மோகனன் என் மீம்களை பார்த்து வெடித்து சிரித்தேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

மாளவிகா மோகனன்:

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன மாளவிகா மோகனன் தனது இரண்டாவது படத்திலையே தளபதிக்கு ஜோடியாகியுள்ளார். தற்போது இந்த படம் வசூலில் சாதனை படைத்தது வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம். தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் இவரது காட்சிகளில் சில புகைப்படம் தற்போது இணையத்தில் மீம் டெம்ப்பலேட்டாக வைரலாகி வருகிறது. அவரது புகைப்படத்தை வைத்து மீம் கிரியேட்டர்ஸ் மிக அருமையாக மீம்களை தயாரித்து வருகின்றனர். இது அனைவரையும் ரசிக்கும் வண்ணத்தில் இருந்து வருகிறது.

மாளவிகா மோகனன் ட்வீட்:

அதில் அவர் பல்துலக்குவது போல், சுவிங்கம் மெல்வது போல் என பலவிதமாக மீம்களை தயாரித்து உள்ளனர். தற்போது இந்த அனைத்து மீம்களையும் மாளவிகா மோகனன் பார்த்துள்ளார். இதை பார்த்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எனது மீம்கள் அனைத்தும் எனது பார்வைக்கு தாமதமாக தான் வந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கான (சிஏஏ) விதிகள் தயார் – மத்திய அரசு அறிவிப்பு!!

அவை அனைத்தையும் பார்த்து நான் வயிறு குலுங்க வெடித்து சிரித்தேன். அதிலும் குறிப்பாக பல் துலக்குவது போல் இருந்த மீமை பார்த்து கடுமையாக சிரித்தேன். நம்மை பார்த்து நாமே சிரிக்காவிட்டால் வாழ்க்கை மிகவும் சலிப்பானது தானே? என்று பதிவிட்டுள்ளார். இவரது மீம்களை பார்த்து இவர் அனைத்து விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துள்ளார். இது மீம் கிரியேட்டர்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here