அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்தது உண்மை – விசாரணை அறிக்கையில் தகவல்!!

0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் என்ற மாடுபிடி வீரர் முதல் பரிசை வென்றது உண்மை என கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜனவரி மாதம் 16 ம் தேதி தமிழகத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூரில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர். அதிக காளையை அடக்கும் சிறந்த மாடு பிடி வீரருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கியதற்காக அவருக்கு கார் பரிசளிக்கபட்டது.

மீம்ஸ்களை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தேன் – மாளவிகா மோகனன் ட்வீட்!!

இந்நிலையில் முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து பரிசு பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 33 எண் கொண்ட சட்டை அணிந்திருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் முதல் மூன்று சுற்றில் 8 காளைகளை அடக்கி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். காயமடைந்த ஹரிகிருஷ்ணன் அவர் அணிந்திருந்த 33 எண் போடப்பட்ட சட்டையை கழற்றி தனது நண்பனான கண்ணன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சட்டையை அணிந்து போட்டியில் கலந்து கொண்ட கண்ணன் ஐந்து காளைகளை அடக்கியுள்ளார். இதனால் 33 எண் கொண்ட சட்டையை அணிந்தவர் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 8 காளைகளை அடக்கி 2 ம் இடம் பெற்ற கருப்பண்ணன் எனும் மாடு பிடி வீரர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். புகாரை வாசித்த கலெக்டர் அன்பழகன் இந்த வழக்கை விசாரிக்க கோட்டாட்சியாருக்கு உத்தரவளித்தார். நடந்து முடிந்த விசாரணையில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here