மறைந்த அண்ணனை நினைத்து மகேஷ்பாபு வெளியிட்ட பதிவு – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

தெலுங்கு சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக திகழ்ந்த ரமேஷ் பாபு கடந்த சனிக்கிழமை அன்று காலமானார். தனது சகோதரரின் பிரிவை நினைத்து மகேஷ்பாபு ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

ரமேஷ் பாபு:

தெலுங்கு சினிமா திரையில் முன்னனி நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர் தான் ரமேஷ் பாபு. இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது சகோதரனான மகேஷ்பாபுவை வைத்து அர்ஜுன், அதிதி ஆகிய படங்களை தயாரித்தார். இந்த இரண்டு திரைப்படமுமே மிக பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. நீண்ட நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு வந்த ரமேஷ் பாபு சனிக்கிழமை அன்று காலமானார்.

ரமேஷ் பாபுவை நினைத்து இவரது தம்பியான மகேஷ்பாபு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நீங்கள் தான் எனது தூண்டுதல், நீங்கள் தான் எனது வலிமை, நீங்கள் தான் எனது தைரியம், எனக்கும் அனைத்தும் நீங்களே, இதுவரை எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. இந்த வாழ்க்கை மட்டும் அல்லாமல் எத்தனை வாழ்க்கை அமைந்தாலும் நீங்கள் ஒருவரே எனது அண்ணன். உங்களை எப்போதும் நேசித்து கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரின் உள்ளமும் நொறுங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here