தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் – மக்களே உஷார்!!

0
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!
கொரோனா பரவல் எதிரொலி - மாநிலத்தில் இந்த 2 நகரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு கட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இதனை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்ட புதிய தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் வருகிற மே மாதம் 20ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
  • தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் மற்றும் டாக்சி போன்றவற்றில் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
  • ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து ஊரக பகுதிகளில் இயங்கும் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மளிகை கடைகள், காய்கறி கடைகள் அனைத்தும் குளிர் சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி. மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  • இந்த கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால், மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய பணிகள் இயங்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனீர் கடைகள் மதியம் 12 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘மக்களை காக்க தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட வேண்டும்’ – ஸ்டாலின் கோரிக்கை!!

  • திறந்த வெளியில் மற்றும் அரங்கிற்குள் விளையாட்டு, அரசியல், கல்வி போன்ற நிகழ்வுகள் மற்றும் மற்ற விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளுக்கு 20 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here