‘மக்களை காக்க தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட வேண்டும்’ – ஸ்டாலின் கோரிக்கை!!

0

கொரோனோ தோற்று மிக விரைவாக பரவி வரும் நிலையில் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பதும் மேலும் நோய் தொற்று பரவாமல் தடுப்பதுமே நமது முக்கியமான கடமையாக இருக்கிறது. மக்களும் அரசும் இணைந்து செயல்படுவது போல தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படவேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

இப்பேரிடர் காலத்தில் பதவி ஏற்கப்போகும் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் பாதுகாப்பிற்காக சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் கொடியதாக காணப்பட்டு வருகிறது. எனவே நோயால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதும் மேலும் தொற்று பரவாமல் தடுப்பதும் நம் தலையாய கடமையாக கருதுகிறார் . தற்போதைய நிலவரப்படி 2ம் அலையின் தாக்கத்தால் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

மக்களை காக்கும் களப்பணியில் அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகளும் செய்யப்படுவது மிகவும் அவசியமானது. அரசு மருத்துவமனை போல தனியார் மருத்துவமனையிலும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுத் தனியார் மருத்துவமனைகள் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்பேரிடர் காலத்தில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை எதிகொள்ளமுடியும் எனவும், மனதில் நம்பிக்கையுடனும் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கவும் வேண்டும் என அவர் கூறினார். மேலும் இது கடினமான காலம் அனால் கடக்க முடியாத காலம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here