டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
Lock
Lock

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மணிப்பூர் மாநில அரசு இந்த ஆண்டு இறுதி வரை (டிசம்பர் 31) ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு உட்பட சில புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பு:

மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 24,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 256 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 21,006 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநில தலைமை செயலாளர் டாக்டர் ராஜேஷ் குமார் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதி வரை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆவின் வேலைவாய்ப்பு 2020 – 8ம் வகுப்பு தேர்ச்சி – ரூ.65,500 வரை சம்பளம்!!

தவிர, சமூக மற்றும் பிற விழாக்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் 2020 டிசம்பர் 31 வரை அத்தியாவசிய சேவைகள், சரக்கு லாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இரவு நேர ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here