இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடியின் அறிவிப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று (ஏப்ரல் 14) உடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி அறிவிப்புகள்:

  • கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு எனும் கவசத்தை நாம் இப்போது தளர்க்க முடியாது என்று இந்தியாவில் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி செய்லபட வேண்டும், வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லவும் பிரதமர் மோடி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
  • வீட்டில் உள்ள வயதானவர்களை அனைவரும் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார்.
  • ஆரோக்கிய சேது அப்ப்ளிகேஷனை அனைவரும் அவர்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார்.
  • அடுத்த ஒரு வாரம் மிக முக்கியமானது எனவும் அதன் பிறகு (ஏப்ரல் 20) ஊரடங்கு உத்தரவு சிறிது சிறிதாக தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஊரடங்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது உண்மை தான், சிலர் தங்கள் குடும்பத்தையும் பிரிந்து உள்ளனர், இத்தகைய சிரமத்தை கடந்து தான் மக்கள் கொரோனாவிற்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
  • இந்தியா கொரோனவால் ஏற்பட இருந்த பாதிப்பை தவிர்த்து விட்டது எனவும் தெரிவித்து உள்ளார்.
  • கொரோனா பரவலை இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக கட்டுப்படுத்தி விட்டது எனவும் தெரிவித்து உள்ளார்.
  • மாநில அரசுகள் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here