தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Lockdown
Lockdown

ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஊரடங்கு விதிமுறைகள்:

  • தமிழகத்தில் ஏற்கனவே முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சென்னை, மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • ஜூலை 5ம் தேதி 31ம் தேதி வரை உள்ள 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வருவது ஆகியவற்றிற்கு இ பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • மாவட்டங்களுக்கு இடையில் ஜூலை 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
  • சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜூலை 6ம் தேதி முதல் அதிகபட்சம் 80% பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • ஜூலை 6ம் தேதி முதல் அனைத்து பெரிய கடைகள், ஷோரூம்கள் (வணிக வளாகங்கள் தவிர்த்து) 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • மளிகை கடைகள், காய்கறி மற்றும் டீ கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்.
  • அனைத்து விதமான இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • டாஸ்மாக் உள்ளிட்ட பிற கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்.
  • மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தளங்களை திறக்க அனுமதியில்லை.
  • திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here