இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!

0
India lockdown
India lockdown

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மே 3 அன்று முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பின்பற்ற கூடிய புதிய நெறிமுறைகளையும், தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

  • நாடு முழுவதும் அனைத்து வகை மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் மருத்துவ தேவவை இன்றி 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
  • ஊரக பகுதிகளில் அனைத்து வகை கடைகளையும் (ஷாப்பிங் மால்கள் தவிர்த்து) திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு உட்பட அனைத்து விதமான விவசாய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • 21 நாட்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக மாற்றப்படும்.
  • அனுமதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 33% தொழிலாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் உட்பட அனைத்து வித கல்வி நிறுவனங்களுக்கும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

மண்டல வாரியாக தளர்வுகள்:

சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் காரில் 2 பேரும் (ஓட்டுநர் உட்பட), பைக்கில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், சலூன் கடைகள் மற்றும் ஸ்பாக்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆட்டோ, ரிக்ஸா, டாக்ஸி மற்றும் பேருந்துகள் இயங்க தடை தொடரும். சிவப்பு மண்டலங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மே 3க்கு பிறகு சென்னை உட்பட 130 நகரங்கள் முடக்கம் – மத்திய அரசின் ரெட்ஜோன் லிஸ்ட்..!

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பஸ் டிப்போக்களில் 50% பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் வாடகை கார்களை இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here