LIC மற்றும் IDBI வங்கி முற்றிலும் தனியார் மயமாக்க முடிவு – மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிக்கை!!

0

தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இதில் ஓர் அறிவிப்பாக LIC மற்றும் IDBI வங்கியை முற்றிலும் தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்:

தற்போது நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2021-22 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். தற்போது இது கொரோனா காலம் என்பதால் அதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் அங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் காகித முறையில் பட்ஜெட்டை தெரிவிக்காமல் இந்த முறை டிஜிட்டல் முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த முறை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனால் அனைவரிடமும் இந்த முறை பட்ஜெட் தாக்கல் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. தற்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன் ஓர் அதிரடியான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் LIC மற்றும் IDBI வங்கியை முற்றிலும் தனியார் மயமாக்க போவதாக அறிவித்துள்ளார்.

LIC நிறுவன பங்கு:

LIC நிறுவன பங்கை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க நடவடிக்கை.

பொதுமக்கள் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும்.

தனது கணவருடன் ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரினா – இணையத்தில் வைரல்!!

தனியார் மயமாகும் IDBI வங்கி:

IDBI வங்கியை முற்றிலும் தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2 பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்க இந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசுக்கு சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் இந்த ஆண்டில் தனியார் மயமாக்கப்படும்.

இந்த ஆண்டு அரசு நிறுவனங்கள் விற்பனை மூலம் ரூ.1.75 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here