
கோலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் லியோ. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை விட லியோ படத்துக்கு வசூல் கிடைக்கும் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பரவலாக பேசி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதுக்குள்ள ஆன்லைன் புக்கிங் லண்டனில் ஆரம்பமாகிவிட்டது. தொடங்கிய கொஞ்ச நேரத்திலே ரசிகர்கள் போட்டி போட்டு புக் செய்து வருகின்றனர். இதனால் லண்டனில் முன்பதிவு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. லண்டனிலே அப்படி என்றால் தமிழ்நாட்டில் என்றால் சொல்லவா வேண்டும்.