7வது ஊதிய குழுவின் கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் அறிவிப்புக்கான தேதி குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி அக்டோபர் 14ஆம் தேதி முதல் தசரா, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வர உள்ளதால், இம்மாதத்தின் (செப்டம்பர்) கடைசி வாரத்தில் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் 2வது அகவிலைப்படி உயர்த்த இருப்பதால், பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.