
பொதுவாக எலுமிச்சை பழத்தை உணவில் மட்டுமல்லாது முகம் மற்றும் கூந்தலை பராமரித்து கொள்ள ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த எலுமிச்சையை வைத்து ஒரு சூப்பரான பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்;
- எலுமிச்சை தோல் பொடி – 2 டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்;
இந்த பேஸ் பேக்கை தயாரிப்பதற்கு எலுமிச்சை தோல் பொடியை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் இந்த எலுமிச்சை தோல் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக்கொள்ளவும். இதோடு 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
150 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கல்வித்துறை அமைச்சர்!!
இப்போது நம் முகத்தை கழுவி சுத்தமான ஒரு காட்டன் துணியில் துடைத்து கொள்ளவும். பிறகு இந்த பேக்கை அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு வாஷ் செய்து கொள்ளவும். மேலும் முகத்தை சாதாரண தண்ணீரில் வாஷ் செய்வதை விட வெதுவெதுப்பான நீரில் கழுவுவது இன்னும் சிறந்தது. இப்படி வாரத்தில் ஒரு முறை இந்த பேக்கை பாலோவ் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க உதவியாக இருக்கும்.