பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்தால் இப்படிலாம் ஆகுமா?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
leggins
leggins

இந்த காலத்து பெண்கள் அதிகம் பயன்படுத்தும் உடை என்றால் லெக்கிங்ஸ் தான். ஏனெனில் இது உடலோடு ஒட்டி இருப்பதால் பயணங்கள் மற்றும் மற்ற இடங்களுக்கு செல்லும்போது ஏற்றதாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் இதனை உபயோகிப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

லெக்கிங்ஸ் விளைவுகள்

மேற்கத்திய நாடுகளுக்கு லெக்கிங்ஸ் அவர்களின் விருப்ப உடையாகும். வெளிநாடுகளை குளிர்காலத்துக்கு ஏற்றவாறு தனது உடல் வெப்ப நிலையை வைத்துக்கொள்ள லெக்கிங்ஸ் அணிந்தனர். மேலும் உடற்பயிற்சிக்கு ஏற்றதாக இருந்ததால் எல்லா காலநிலைகளிலும் அதனை பயன்படுத்திக்கொண்டனர். அனைத்து நாடுகளிலும் லெக்கிங்ஸ் தனி பட்டாளமே உள்ளது.

ladies-leggins
ladies-leggins

மேலும் லெக்கிங்ஸ் அணிவதால் கால்கள் வடிவமைப்பை கவர்ச்சியாக காட்டுவதால் இதற்கு பல விவாதங்கள் எழுந்தன. அதையும் தாண்டி கோடைகாலத்தில் இந்த லெக்கிங்ஸ் பயன்படுத்தும்போது இறுக்கமாக இருப்பதால் வியர்வை கூட வெளிவராமல் அங்கேயே தங்கி விடுகிறது. இதனால் கால்களுக்கிடையே தங்கி பூஞ்சான் ஏற்படுகிறது.

leggins
leggins

இந்த லெக்கிங்ஸ் அணிவதால் பெண்கள் உடலுக்கு ஏற்றதல்ல. இதனால் பெண்களின் இனப்பெருக்க திறன் பாதிக்கும். வரும் இளம்பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்தால் அவர்கள் வளர்ச்சி கூட தடைபடும். குறிப்பாக லெக்கிங்ஸ் அணியும்போது அதனை நன்கு துவைத்து காயவைத்து போட வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here