ஆன்லைனில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
Aadhar-Card-Download
Aadhar-Card-Download

ஆதார் கார்டு என்பது இப்பொழுது கட்டாயமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஆவணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியம். அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு ஆரம்பிப்பதிலிருந்து வேலைக்கு சேருவது முதற்கொண்டு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. தற்போது ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளும் ஆதார் அட்டையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆதார் டவுன்லோடு செய்ய:

வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்ய முடியும்.

adhaar online download
adhaar online download
  • முதலில் E-Aadhar என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அதன்கீழ் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்காக சில விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவைகளாவன,
  • Using Aadhaar number
  • Enrollment ID
  • Virtual ID
  • போன்ற விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களிடம் எது உள்ளதோ அதனை கிளிக் செய்யவும்.
  • அதன்பின் தேவையானவற்றை பூர்த்தி செய்தபின் ‘Send OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதனை உள்ளிடவும்.
  • அனைத்து படிநிலைகளும் முடிந்தபின் ஆதார் அட்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும். ஆனால் நீங்கள் பதிவிறக்கம் செய்த ஆதார் அட்டை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
  • உங்கள் பாஸ்வேர்ட் எப்படி இருக்குமெனில் நீங்கள் ஆதாரில் கொடுக்கப்பட்டிருந்த பெயரில் முதல் 4 எழுத்துக்களும் பிறந்த வருடமும் சேர்த்து இருக்கும். அதாவது உங்கள் பெயர் Sudha, 1997 இல் பிறந்ததாக வைத்துக்கொண்டால் உங்கள் பாஸ்வேர்ட் SUDH1997 என்பதாகும். ஒவ்வொரு முறையும் இந்த பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here