தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

0

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து ரூ.37,600க்கு விற்கப்படுகிறது.

ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருக்கும் நிலையில் தற்போது 3 தினங்களாக தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு
தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம்  ரூ.39,080 வரை விற்கப்பட்டது. நேற்றைய தினம் ரூ.38,032 க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து, ரூபாய்.37,600க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் நேற்றைய விலை ரூ.4754 ஆகவும், இன்று 54 ரூபாய் குறைந்து 4700 ரூபாயாகவும் உள்ளது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலையிலும் சற்று மாற்றம் ஏற்பட்டு கிராம் ரூ.5,084க்கும், சவரன் ரூபாய் 40,672 க்கும் விற்பனை செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here