ஜன.16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
vaccine

நாடுமுழுவதும் வரும் ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள், கொரோனா களப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 16 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகள் தற்போது முடிவு பெற்ற நிலையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தோனேசியாவில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானம் – 182 பயணிகளின் நிலை??

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளது போல இந்த தடுப்பூசி 30 கோடி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், கொரோனா களப்பணியில் உள்ள 3 கோடி பேருக்கு முதலாவதாக போடப்பட உள்ளது. அதை தொடர்ந்து பொதுமக்கள் 27 கோடி பேர் என்ற கணக்கில், கொரோனா தடுப்பூசி 50 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 50 வயதிற்கு உட்பட்ட மற்ற நோய் உள்ளவர்களுக்கும் போடப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here