தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் – தொற்று நோயியல் நிபுணர் பகீர் தகவல்!!

0

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று தாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது, மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற பெயரில் புது வகை வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் தாக்கியது. இந்த வைரஸ் பெரும் தொற்றால் உலகளவில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த புது வகை வைரஸ் தொற்றிற்கு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கடந்த ஆண்டு முதல் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

‘பிப்ரவரி 25க்குள் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்க வேண்டும்’ – விஜயகாந்த் அறிவிப்பு!!

இந்தியாவில் பலருக்கும் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. தற்போது வரை சிலருக்கு மட்டுமே இந்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தடுப்பூசி குறித்து தற்போது தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ரவி ஒரு பரபரப்பு தகவலை வழங்கியுள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு டாக்டரான தொற்று நோயியல் நிபுணரும், கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கூறியதாவது, “இந்தியாவில் தற்போது அனைவரும் கொரோனவிற்கான தடுப்பூசிகளை போட்டு கொள்கின்றனர். ஆனால், இவ்வாறாக தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கம் இருக்கத்தான் செய்யும். கொரோனா நோய் தாக்கினாலும், வைரஸின் பாதிப்புகள் இருக்காது. ஒரு நோயிற்கு தடுப்பூசி தயாரிக்க குறைந்தது பல மாதங்கள் ஆகும். ஆனால், கொரோனவிற்கான தடுப்பூசி 10 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இதன் திறன் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here