‘பிப்ரவரி 25க்குள் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்க வேண்டும்’ – விஜயகாந்த் அறிவிப்பு!!

0

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 25ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கும்படி தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி. தற்போது சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 25ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அனுப்பலாம் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு – மார்ச் 15ல் சிவில் நீதிமன்றம் விசாரணை!!

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் பிப்ரவரி 25ம் தேதியிலிருந்து மார்ச் 3ம் தேதி வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை விருப்ப மனுக்களை அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ15 ஆயிரம் எனவும் தனித்தொகுதிக்கு ரூ10 ஆயிரம் எனவும் கட்டணம் நிணயிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் எனவும் தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி சார்பில் ஏற்கனவே விருப்ப மனுக்கள் விண்ணப்பிக்க துவங்கிவிட்டது. அதிமுக கட்சி சார்பில் விருப்ப மனுக்களின் விண்ணப்பம் வரும் 24ம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here