டபுள் மாஸ்க் போடுவது நல்லது – முதல்வர் பரிந்துரை!!!

0

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் டபுள் மாஸ்க் போடுவது நல்லது என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

டபுள் மாஸ்க் போடுவது நல்லது:

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதையை நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  2,67,334 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் அரசு சார்பில் முகக்கவசம் அணிய தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இத்தனை தொடர்ந்து முகக்கவசம்  அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமும் தமிழக அரசு விதித்தது. அதன் படி மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போதும், பேசும்போதும் முகக்கவசம் அணிந்துவந்தனர். மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் டபுள் மாஸ்க் போடுவது நல்லது என்று கூறினார்.

இதை பற்றி சற்று முன் பேசிய முதல்வர் ஸ்டாலின் மக்கள் அதிகமாக செல்லும் ஆலைகள், பேருந்துகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களுக்கு இரட்டை முகக்கவசம் அணிந்து போவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here