கொரோனா சிகிச்சையிலிருந்து நீக்கப்படுமா ரெம்டெசிவிர், டெல்லி மருத்துவர் தகவல்!!!

0

COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ரெம்டெசிவிர் மருந்தின் செயல்திறன் பற்றிய எந்த ஆதாரமும் இல்லாததால், ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படலாம் என டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் முத்த மருத்துவர்  டாக்டர் DS.ராணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் DS.ராணா கூறியதாவது, அனைத்து சோதனை மருந்துகளும், ரெம்டெசிவிர் உட்பட கோவிட்-19 க்கு எதிரான அதன் செயல்பாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் விரைவில் கைவிடப்படலாம். மேலும் அவர் தற்போது வரை மூன்று மருந்துகள் மட்டுமே இந்த கொரோனா தொற்றிற்கு எதிராக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா சென்ற ஆண்டு தொடங்கிய காலத்தில் ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்துகள் பயன்படுத்தப்பட்டது, பின் அந்த மருந்து பயனளிக்கவில்லை என்று நீக்கப்பட்டது. அதன்பின் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிரான சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த முறையும் பயனளிக்கவில்லை என மத்திய அரசு கூறி இம்முறையை கைவிட்டுள்ளது.

இந்த கட்டத்தில்தான் இந்தியாவில் ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சை முறையில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த மூத்த மருத்துவர் DS ராணா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here