ஆக்சிஜன் தொடர்பான உபகாரணங்களுக்கு இறக்குமதி வரி ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வேகமெடுத்து வருகிறது. மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிறு முழு ஊரடங்கு போடப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யபட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பபடாமல் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

மேக்கப் போடாமல் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளான டிடி – வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜனுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மோடி உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை நடத்தும் போது இதனை தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிக்கான வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 3 மாதங்கள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here