விஜய் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு தாவிய பிரபலம் – எந்த சீரியல் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “இதயத்தை திருடாதே”. இந்த சீரியலில் தற்போது விஜய் டிவி பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

“இதயத்தை திருடாதே” சீரியல்

“இதயத்தை திருடாதே” சீரியல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் நடிக்கும் சிவா மற்றும் சஹானா இருவருக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது என்றே கூறலாம். ஆரம்பத்தில் இருந்தே சண்டை கோழிகளாக இருக்கும் நாயகன் மற்றும் நாயகி இருவரும் எவ்வாறாக இணைகின்றனர் என்று இந்த சீரியலில் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் நடித்து வந்த அமித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேக்கப் போடாமல் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளான டிடி – வைரலாகும் புகைப்படம்!!

இவர் மிகவும் பிரபலம் அடைந்தது “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியலின் மூலமாக தான். இவர் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளாராம். இப்படியாக இருக்க, இவர் “இதயத்தை திருடாதே” சீரியலில் ஸ்பெஷல் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here