சுவையான “ரவா குலாப் ஜாமுன்” ரெசிபி – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்றால் அது, ஸ்வீட். இன்று ஈஸியாகவும் அதே சமயம் அனைவருக்கும் பிடித்த வகையில் உள்ள “ரவா குலாப் ஜாமுன்” ரெசிபி எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • ரவை – 1/2 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • பால் – 2 கப்
  • நெய் – 3 டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
  • பால் பவுடர் – 1/4 கப்
  • பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு சட்டியினை காய வைத்து அதில் நெய் ஊற்றி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் ரவை சேர்த்து நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் சிறிது சிறிதாக பாலை ஊற்றி கலக்க வேண்டும். அடிபிடிக்க விடாமல் இதனை நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பால் வற்றியதும், இந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

விஜய் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு தாவிய பிரபலம் – எந்த சீரியல் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

இதனை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பாகு பதத்திற்கு வந்ததும் அதனை எடுத்து ஆற வைக்க வேண்டும். பின், எடுத்து வைத்துள்ள ரவையில் ஏலக்காய் தூள், பால் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். அதனை சர்க்கரை பாகில் போட்டு ஊற வைக்க வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “ரவா குலாப் ஜாமுன்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here