மேக்கப் போடாமல் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளான டிடி – வைரலாகும் புகைப்படம்!!

0

சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி தற்போது மேக்கப் போடாமல் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினி டிடி

தனியார் தொலைக்காட்சி சிலவற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், டிடி என்று கூறப்படும் திவ்யதர்ஷினி. இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். இப்படியாக இருக்க, இவர் விஜய் தொலைக்காட்சியில் அவார்ட் நிகழ்ச்சிகள், வாரம் தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.

பாலியல் வன்கொடுமையில் தமிழகம் மூன்றாவது இடம் – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

இவர் தொகுத்து வழங்கிய “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், டிடி ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் தனது நெடுநாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர். திருமண முறிவிற்கு பின்பு, டிடி தொடர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியாக இருக்க, டிடி மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு தான் எடுத்து கொண்ட ஒரு சில புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மேக் அப் போடாமல் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இவர் ஒரு கொண்டையும் போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் “அது என்ன மண்ட மேல ஒரு கொண்டை” என்று கூறி கேலி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here