நடிகை குஷ்பூவின் பழைய நண்பர் இவர் தான்….,அவரே பகிர்ந்த புகைப்படம்…..,

0
நடிகை குஷ்பூவின் பழைய நண்பர் இவர் தான்....,அவரே பகிர்ந்த புகைப்படம்.....,
நடிகை குஷ்பூவின் பழைய நண்பர் இவர் தான்....,அவரே பகிர்ந்த புகைப்படம்.....,

நடிகை குஷ்பூ தனது நீண்ட நாள் நண்பர் திருச்சி சிவாவை சந்தித்தது தொடர்பான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பூ

1980களில் தென் இந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. சினிமாவில், நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, சற்று உடல் பருமனாக இருப்பவர்களும் நடிக்கலாம் என்று சாதித்து காட்டியவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டுள்ளார். சினிமாவில் சாதித்தது மட்டும் இல்லாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த குஷ்பூ தற்போது பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிநீக்கம்…..,ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியம்….,

இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது நீண்ட நாள் நண்பரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவை விமானத்தில் வைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட குஷ்பூ, ‘பழைய நண்பர்களை சந்திப்பது எப்போதுமே சந்தோசம் தான்’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here