பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிநீக்கம்…..,ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியம்….,

0
பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிநீக்கம்.....,ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியம்....,
பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிநீக்கம்.....,ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியம்....,

கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்த ஊழியர்களுக்கு ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணிநீக்க ஊதியம்

உலகளவிலான முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கம் காரணமாக இதுவரைக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முன்னணி தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏப்ரல் 6 வரை கல்லூரி அடைப்பு…..,பாலியல் புகார் எதிரொலி….,

இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ. 2.60 கோடி வரை இழப்பீடு வழங்க கூகுள் ஐரிஷ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிக்கைகள் கிடைத்துள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய பணிநீக்கம் மூலம் அயர்லாந்தில் உள்ள 240 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஊழியர்களில் சிலருக்கு, இந்திய மதிப்பில் 2.60 கோடி வரையிலான இழப்பீடுகளை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here