ட்விட்டருக்கு சமமாக வளர்ந்து வரும் ‘கூ’ வலைத்தளம் – இணைந்த பிரபலங்கள்!!

0

சில நாட்களாக ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் ட்விட்டருக்கு சமமாக ‘கூ’ வலைத்தளம் வளர்ந்து வருகிறது. இதில் பல பிரபலங்கள் தற்போது தங்களது கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

ட்விட்டர்:

டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பல்வேறு தரப்பினர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ட்விட்டர் களமே போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டர் நிறுவனம் அவ்வப்போது நீக்கி வருகிறது. மேலும் சிலரது கணக்குகளை முடக்கியும் உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் முடக்கிய கணக்குகளை மீண்டும் பயனாளர்களை உபயோகப்படுத்த ட்விட்டர் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் செயலிக்கு மாறாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ வலைத்தளம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ‘கூ’ வலைதளத்தில் பிரபலங்கள் பலர் தங்களது கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் புதுவீடு பூமி பூஜை – ரஜினிகாந்த் பங்கேற்பு!!

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, ஆன்மிக குரு ஜகி வாசுதேவ் உள்ளிட்டோர் ’கூ’ சமூகவலைதளத்தில் இணைந்துள்ளனர். தற்போது இதன்மூலம் விரைவாக ‘கூ’ வலைத்தளம் ட்விட்டரை மிஞ்சிடும் என்று கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here