தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிப்பு – செரோலாஜிக்கல் ஆய்வில் தகவல்!!

0

தமிழகத்தில் இதுவரை பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாயினர் என செரோலாஜிக்கல் ஆய்வில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரத்துறை அறிவித்த கணக்கை விட 36 மடங்கு அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செரோலாஜிக்கல் ஆய்வு

செரோலாஜிக்கல் என்பது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா கூறுகளில் சார்ஸ் கோவ்-2 என்ற ஆன்டிபாடிகளை கண்டறியும் ஒரு சோதனை ஆகும். தமிழகத்தில் பொது சுகாதார இயக்கம் சார்பில் செரோலாஜிக்கல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கடந்த நவம்பர் மாத நிலவரப்படி தமிழகத்தில் 2.3 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட 36 மடங்கு அதிகமாகும்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷின் புதுவீடு பூமி பூஜை – ரஜினிகாந்த் பங்கேற்பு!!

அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் சராசரியாக 31.5 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் மாத கணக்கின்படி தமிழகத்தில் பத்து பேரில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் அதிகமாக 51.05 சதவீதமும், அடுத்ததாக நீலகிரியில் 11.1 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னையில் 40.9 சதவீதமும், கோவையில் 20.4 சதவீதமும், திருச்சியில் 32 சதவீதமும், மதுரையில் 38 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், ‘கொரோனா நோய் தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கே தெரியவில்லை. அறிகுறிகள் ஏதும் இல்லாத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாத தகவலின்படி கொரோனா இறப்பு வீதம் 1.5 சதவீதமாக இருக்கிறது. ஆனாலும் ஆய்வின் முடிவின் படி இறப்பு வீதம் 0.052 சதவீதமாக இருந்துள்ளது’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here