ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா…, சஞ்சு சாம்சன் படை அதற்கு வழி வகுக்குமா??

0
ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா..., சஞ்சு சாம்சன் படை அதற்கு வழி வகுக்குமா??
ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா..., சஞ்சு சாம்சன் படை அதற்கு வழி வகுக்குமா??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இறுதிக் கட்ட லீக் போட்டிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இதுவரை, 55 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 15 லீக் போட்டிகளும் வரும் மே 21ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பை நோக்கியே போட்டி நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, முதலில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த போதும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி வருகிறது. இதனால், வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி மோத உள்ளது. இதே போல, கொல்கத்தா அணியோ கடைசியாக விளையாடிய 2 போட்டிகளை வென்று, ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி இன்று களமிறங்க உள்ளது. இந்த போட்டியின் வெற்றிக்காக களமிறங்கும் பிளேயிங் லெவன் எதிர்பார்க்கப்படும் வீரர்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.

எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் CSK யின் “ஜூனியர் மலிங்கா”…, டெல்லியை வேட்டையாடி அபாரம்!!

KKR அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ஆர்கே சிங், ஜேஜே ராய், என் ராணா(சி), ஏடி ரஸ்ஸல், எஸ் பி நரைன், வி ஆர் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, எச் ராணா, வைபவ் அரோரா.

RR அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் , தேவ்தத் படிக்கல் , ஷிம்ரோன் ஹெட்மியர் , ஜே இ ரூட் , ரவிச்சந்திரன் அஷ்வின் , ஜோஸ் பட்லர் , சஞ்சு சாம்சன்(சி), டிரென்ட் போல்ட் , யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, குல்தீப் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here