எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் CSK யின் “ஜூனியர் மலிங்கா”…, டெல்லியை வேட்டையாடி அபாரம்!!

0
எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் CSK யின்
எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் CSK யின் "ஜூனியர் மலிங்கா"..., டெல்லியை வேட்டையாடி அபாரம்!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்புக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

CSK vs DC:

இந்தியாவில் நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது, தனது 12 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற CSK அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, CSK அணியின் தொடக்க வீரர்களாக, ருதுராஜ் கெய்க்வாட் (24) மற்றும் டெவோன் கான்வே (10) களமிறங்கி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களை தொடர்ந்து, அஜிங்க்யா ரஹானே (21), மொயின் அலி (7), சிவம் துபே (25), அம்பதி ராயுடு (23) என சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின், ஜடேஜா (21), தோனி (20) என சிக்ஸர் பவுண்டரிகளை விளாசினர். இதனால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்திருந்தது.

இந்த இலக்கை துரத்த களமிறங்கிய, டெல்லி அணி வீரர்கள் CSKயின் “ஜூனியர் மலிங்கா” மதீஷ் பத்திரன, தீபக் சஹர், ஜடேஜா உள்ளிட்டவர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணியிடம் டெல்லி அணி தோல்வியை அடைந்தது. இதன் காரணமாக, டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில், 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக், பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாகி உள்ளது. இந்த போட்டியில், ஆல்ரவுண்டராக அசத்திய ஜடேஜா, பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here