
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் ராதிகா ஹாலில் திமிராக அமர்ந்துகொண்டு டிவியை பார்க்கிறார். இதை பார்த்து கடுப்பான ஈஸ்வரி பதிலுக்கு பதில் டிவி நான் தான் பார்ப்பேன் என்று போடுகிறார். பிறகு ராதிகா சமைக்க கிச்சனுக்கு வர செல்வி வெந்நீர் எடுத்து வந்து ஈஸ்வரிக்கு கொடுக்க எனக்கு அப்படியே ஒரு காபி கொடு என கேட்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதுக்கு செல்வி இப்போதைக்கு காபி போட முடியாது என்று சொல்ல, ஈஸ்வரி ஏன் என்று கேட்க ராதிகா சமைக்கும் விஷயத்தைச் சொல்கிறார். பின் கிட்சனுக்கு வரும் ஈஸ்வரி ராதிகா சமைப்பதை நிறுத்தி விட்டு ஒரு பக்கம் டிகாஷன் ஒரு பக்கம் பால் காய்ச்சி எனக்கு காபி குடு செல்வி என்கிறார் ஈஸ்வரி. இதனால் ராதிகா கோபப்படுகிறார்.
ஈஸ்வரி இதோடு நிறுத்திக் கொள்ளலாம் உன்னை கோபியிடம் இருந்து பிரித்து அவனிடம் விவாகரத்து வாங்கி கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புவேன் என்று சொல்கிறார். பதிலுக்கு ராதிகா பதிலுக்கு நான் தான் உங்க மருமகள் என உங்க வாயால சொல்ல வைக்கிறேன் என சவால் விடுகிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர பாக்யா தன்னுடைய தோழியுடன் பேசுவதை பார்த்து அவர் பழனிசாமியுடன் தான் பேசுகிறார் என தவறாக நினைக்கிறார்.
பின் ரூமுக்கு வரும் கோபி ராதிகா கடுப்பாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க அவர் வீட்டில் நடந்த விஷயத்தைச் சொல்கிறார். இதுக்கு கோபி பாக்கியா நல்லவ மாதிரி நாடகமாடிக்கிட்டு இருக்கா. இது தெரியாம வீட்டில் உள்ளவர்கள் அவங்களுக்கு சப்போர்ட் செய்கின்றனர் என திட்டுகிறார். இதுக்கு ராதிகா இத போய் உங்க வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லுங்க என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.