கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் – சும்மா ட்ரை பண்ணி பாருங்களே!!!

0

கடல் உணவுகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் இறால் சாப்பிடுவது என்பது இன்னும் சிறந்தது. இதுவரை இறாலை மசாலா, ப்ரை என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறால் ரோஸ்ட், அதுவும் கேரளா ஸ்டைலில் செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் அவசியம் சுவைத்துப் பாருங்கள். இங்கு கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் எப்படி செய்வதென்று ஷேர் பண்ணியுள்ளோம். இதனை படித்து, சமைத்து பயன் பெறுங்கள்.

ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • பெரிய இறால் – 750 கிராம்
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

ரோஸ்ட் செய்வதற்கு:

  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • வெங்காயம் – 1 1/2 கப் (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தய பொடி – 1 சிட்டிகை
  • கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் நன்கு அலசி நீரை முற்றிலும் வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து பிரட்டி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு 5 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து, இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயையும் சேர்த்து, அதில் கடுகு போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி, பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகுத் தூள், வெந்தய பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி, மசாலா அனைத்தும் ஒன்று சேர வதக்கி விட வேண்டும். இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 1/4 கப் சூடான தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, வாணலியை மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,

கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட் ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here