வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ் – இணையத்தில் வைரல்!!

0
keerthi suresh

தமிழ், தெலுங்கு என கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தன் முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான கீர்த்தி தனது வலைப்பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கிறார் கீர்த்தி.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் அம்மாவும் நடிகை என்பதால் இவருக்கு எளிதில் படவாய்ப்புகள் கிடைத்தது. மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் முதன்முதலில் நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படம் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமடையவில்லை. ஆனால் அவரின் அந்த எதார்த்த நடிப்பும், அழகும் மக்களிடையே பேசப்பட்டது.

அதன் பிறகு அவருக்கு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படமே அவரின் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் நடிப்பும், ரியாக்ஷனும் தரமாக இருந்தது என்றே சொல்லலாம். மேலும் அதன் பிறகு தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

keerthi suresh

மேலும் சினிமாவில் காலடி எடுத்துவைத்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. மேலும் முன்னணி நடிகையாகவும் வளர்ந்துள்ள அவர் அண்ணாத்த ‘மிஸ் இந்தியா, ரங் டே போன்ற படங்கள் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டுள்ளார்

keerthi suresh

தற்போது உடல் எடையை முழுவதுமாக குறைந்திருக்கும் கீர்த்திக்கு படவாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

keerthi suresh

அந்த வகையில் அவர் கறுப்பு சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதே போல வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கிறார் கீர்த்தி. அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here