Saturday, May 11, 2024

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர் குழு அறிக்கை!!

Must Read

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நலன் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருவதாக மருத்துவர் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்க்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் கடந்த 12ஆம் தேதி மரணம் அடைந்தார். பல அமைச்சர்களும் அவருக்கு நேரில் சென்று தங்களது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவும் சேலத்திற்கு சென்றார். சேலத்திற்கு காரில் சென்று கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீர் என்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உடல் நலக்குறைவினை தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு துரைக்கண்ணுவிற்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்று சந்தேகப்பட்டனர்.

கொரோனா தொற்று உறுதி:

அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருக்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறி வந்தனர். அவரை பரிசோதித்து வரும் டாக்டர்கள் தற்போது அவர் உடல் நலன் குறித்து அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறிருப்பதாவது “அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நலன் நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு ஒரு பக்கம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது, அதிலும் அவரது உடல்நலன் பின்னடைவினை சந்தித்துள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளனர். இது கட்சி தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: CSK மீண்டும் தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை அணி,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -