கயல் தொடரில் இணைந்த சஞ்சீவ்., இனி அடுத்து கயல், எழில் ரொமான்ஸ் start! சீரியலின் அடுத்த ட்ராக் இதான்!!

0
கயல் தொடரில் இணைந்த சஞ்சீவ்., இனி அடுத்து கயல், எழில் ரொமான்ஸ் start! சீரியலின் அடுத்த ட்ராக் இதான்!!
கயல் தொடரில் இணைந்த சஞ்சீவ்., இனி அடுத்து கயல், எழில் ரொமான்ஸ் start! சீரியலின் அடுத்த ட்ராக் இதான்!!

கயல் தொடரில் நடிகர் சஞ்சீவ் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இனி சீரியல் அடுத்த ட்ராக் இதுதான் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று கயல். டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதலாவது இடத்தை பெரும் இந்த சீரியல், ஆரம்பத்திலிருந்து தற்போது வரை பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

திடீரென இவர் குறித்த காட்சிகள் சீரியலில் காட்டப்படவில்லை. இதனால் இவர் இதிலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது 2 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் சஞ்சீவ் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

என்னது, Adjust பண்ணா தான் வாய்ப்பா? நீ விளக்கு புடிச்சியா? பயில்வானை பொளந்து கட்டிய பிக்பாஸ் பிரபலம்!!

இவரின் என்டரிக்கு பிறகு, இனி கயல் சீரியலில் எழில், கயல் சார்ந்த ரொமான்டிக் காட்சிகள் இருக்கலாம் என்றும், ஹீரோ ஹீரோயின் குறித்த காட்சிகள் அதிகமாக இருக்கும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலை இந்த டிராக் நோக்கி கொண்டு சென்றால், இன்னும் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து சீரியல் குழு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here