
சின்னத்திரையில் தனது கலைப் பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னேறி போய் கொண்டிருக்கும் நடிகர் தான் கவின். இவர் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இவரின் அடுத்த படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கொஞ்சம் நாட்களிலே இயக்குநர் எலன் இயக்கும் ஸ்டார் என்ற படத்தில் கமிட்டானார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகிய இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளனர். இதில் பிரீத்தி முகுந்தன் புதுமுக நடிகை என்றும், அதிதி பொஹங்கர் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடவை கவின் இரண்டு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் போலயே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்., குறுவை சாகுபடிக்கான நிவாரணம்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!!