தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில், அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை சில நிபந்தனைகளோடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மறைந்த அரசு ஊழியரின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால், அவருக்கு வாரிசு பணி வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இறந்த அரசு ஊழியரின் மகளுக்கு திருமணம் ஆனாலும் கூட, குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொள்ளலாம். எனவே கருணை அடிப்படையில் மகளுக்கு வாரிசு வேலையை வழங்கலாம்.” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.