Friday, April 26, 2024

கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு மாரடைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவராக கருதப்பட்டவர், கபில் தேவ். இந்திய அணியின் வெற்றி நாயகனாக கருதப்பட்ட அவர் தற்போது நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கபில் தேவ்:

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கென்று தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா அணி வெற்றி அடைய வேண்டும் என்பது பலரது தீவிரமான ஏக்கம் என்று கூட சொல்லலாம். அப்படி பலரது கனவுகளை 1983 ஆம் நடந்த உலககோப்பையின் போது நிறைவேற்றியவர், கபில் தேவ்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், தலை சிறந்த கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட் அணியில் திகழ்ந்தார். முதன் முதலாக, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். இந்திய கிரிக்கெட் அணி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:

அதன் பின் 2004 ஆம் ஆண்டு தனது ஓய்வினை அறிவித்தார். அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகள் குறித்து தனது கருத்துக்களை கூறி வந்தார். இப்படியாக இருக்க 61 வயதாகும் கபில் தேவ் ஹார்ட் அட்டாக் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது தற்போதைய உடல் நிலை குறித்து மருத்துவர்கள் எதுவும் கூறவில்லை. இந்த செய்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TET தேர்வுக்கு தயாராகுபவர்களா நீங்கள்? தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -