ஆல்ரெடி என் மனசை பறிகொடுத்துட்டேன்… ஐஸ்வர்யா மீது வெறுப்பை காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!!

0

விஜய் டிவியில் மிக வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூர்த்தியின் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில்  நடித்து வருபவர் சரவண விக்ரம், மேலும் அவரின் காதலியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தீபிகா  நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.

கூட்டு குடும்ப கதையை கருப்பொருளாக கொண்டு விஜய் டிவியில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் அண்ணன் தம்பியின் பாசம், அம்மாவாக இருக்கும் அண்ணியின் பாசம், மேலும் ஒரு கூட்டு குடும்பம்  உடையாமல் பாதுகாக்க போராடும் பாசப்பிணைப்பை பிரதிபலிக்கும் ஒரு சீரியல். இந்த சீரியலில் தற்போதைய கதையாக வீட்டின் கடைசி தம்பி கண்ணனும், அண்ணி தனத்தின் அத்தாச்சி கஸ்தூரியின் அக்கா மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஐஸ்வர்யாவுக்கு முல்லை உடன் பிறந்த  அக்காவின் வளர்ப்பு மகன் பிரசாந்த் உடன் நிச்சயம் முடிந்து விடுகிறது. இவர்களின் காதல் விவகாரத்தை பிரசாந்திடம் சொல்ல போராடி ஒரு வழியாக பிரசாந்த்துடன் உண்மையை சொல்லுகிறாள் ஐஸ்வர்யா. இந்த உண்மை தெரிந்த உடன் கோபத்தில் கல்யாணத்தை உடனே நடத்த முடிவு செய்கிறார் பிரசாந்த்.மேலும் இதற்காக ஐஸ்வர்யாவை தன்னுடன் மதுரைக்கு அழைத்து செல்லவும் திட்டமிடுகிறார்.இவ்வாறு பல விறுவிறுப்புகளுடன் கதை நகருகிறது.

மேலும் சீரியல் எவ்வளவு பரபரப்புடன் ஒளிபரப்பானாலும், ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அவர்களின் லூட்டிக்கு அளவில்லை. அந்த வகையில் கண்ணன்,பிரசாந்த் மற்றும் ஐஸ்வரியா சேர்நது  செய்யும் ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற ஒன்று. இந்நிலையில் தற்போது கண்ணன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்ற பேமஸ் வசனத்திற்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரீல்ஸ்  சேர்ந்து செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here