நீ இல்ல… நான் இல்ல… நாமுன்னு மாத்து… குதூகல ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வர்யா!!!

0

விஜய் டிவியின் டாப் சீரியல்கள் வரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பவர்கள் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து விஜய் பட பாடல் ஒன்றுக்கு  ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டுக்கு  தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் புது வாழ்க்கையை ஒரு புது வீட்டில் தொடங்குகின்றனர். என்ன தான் மூர்த்தியின் குடும்பம் இவர்கள் இருவரின் மீதும் கோபமாக இருந்தாலும் ஆளாளுக்கு ஆள்  தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அதாவது மீனா தன் அப்பா மூலமாக அவர்கள் இருவரும் தங்க ஒரு வீடு ஏற்பாடு செய்கிறார். ஜீவா தன் பங்கிற்கு தன்னால் முடிந்த 4000 ரூபாய் பணத்தை கண்ணனின் நண்பன் மூலமாக உதவுகிறார். தற்போது அண்ணி தனம், அண்ணண் மூர்த்திக்கு தெரியாமல் கண்ணனுக்கு ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறார்.

இவ்வாறு பிரிவு சோகம், சந்தோஷம் கலந்த கலவையாக இந்த சீரியல் நகர்கிறது. மேலும் இந்த சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுக்கு ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தங்களின் பொழுதை கழிக்க ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் செய்து அதை தங்களின் ரசிகர்களுக்காக இணையத்தில் பகிர்கின்றனர்.

அந்த வகையில் தற்போது அந்த சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் அவர்களும் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் விஜே தீபிகா அவர்களும் சேர்ந்து விஜய்யின் திருமலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டால் ஷேர் செய்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here