என்னப்பா சொல்றீங்க.., கமல், விஜய் சேர்ந்து நடிக்கும் புது படம்.., அதுவும் இந்த இயக்குனர் கூடயா??

0
என்னப்பா சொல்றீங்க.., கமல், விஜய் சேர்ந்து நடிக்கும் புது படம்.., அதுவும் இந்த இயக்குனர் கூடயா??
என்னப்பா சொல்றீங்க.., கமல், விஜய் சேர்ந்து நடிக்கும் புது படம்.., அதுவும் இந்த இயக்குனர் கூடயா??

பிரபல இயக்குனருடன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்கள் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது தவிர இந்த படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் மற்றும் பிரித்விராஜ் கமிட்டாகி உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியது. இப்படி இருக்கையில் தளபதி 67 படம் LCU வில் இணையுமா என ரசிகர்கள் பலரும் இயக்குனரிடம் கேள்வி எழுப்பினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இது குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கமல் நடிப்பில் வெளியான விக்ரம், கார்த்தி நடித்த கைதி படத்தின் தொடர்ச்சியாகவே இருந்தது. மேலும், இந்த படத்தில் சூர்யா கிளைமேக்ஸில் வந்து அசத்தி இருந்தார். இதன் மூலம் கமல், சூர்யா, கார்த்தி மூவரையும் ஒரே படத்தில் காட்டினார்.

ஐயோ ஷிவானி.., இப்படி போஸ் கொடுத்து எல்லாத்தையும் தவிக்க விடுறீங்களே.., புலம்பி தவிக்கும் இளவட்டங்கள்!!

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே அமைந்தது. இந்நிலையில் தளபதி 67 படத்தையும் இத்துடன் இணைப்பார் என்று தான் தெரிகிறது. ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தளபதி 67, விக்ரம் படத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக தளபதி 67 படம் LCU வில் இணைந்து விடும் என்று தான் தெரிகிறது. இதனால் ஒரே படத்தில் விஜய், கமல், சூர்யா, கார்த்தியை காண ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here