பிரபல நடன இயக்குனரின் அடுத்த முயற்சி.., உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த உலகநாயகன்!!

0
பிரபல நடன இயக்குனரின் அடுத்த முயற்சி.., உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த உலகநாயகன்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் ஷெரீஃப். இவர் சூது கவ்வும், எதிர்நீச்சல், காக்கி சட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் டான்ஸ் மாஸ்டர் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்க்கு choreography செய்யவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் புதிதாக ஒரு செயலியை உருவாகியுள்ளார். அதாவது தற்போதைய அவசர உலகத்தில் மக்கள் பரபரப்பாக இருந்து வருவதால் உடற்பயிற்சி செய்ய டைம் கிடைக்காமல் இருந்து வருகிறது. அவர்களுக்கு எளிதான உடற்பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக வைத்திருக்க ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உருவாகியுள்ளார்.

ஹைதராபாத்தில் கம்பீர், விராட் கோலி மீண்டும் மோதல்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள இந்த ஜூபாப் நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இது குறித்து ஷெரீஃப் பேசியதாவது, உடற்பயிற்சி ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால், தற்போதைய உலகில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. எனவே ஒரு நாளைக்கு வெறும் 5 முதல் 10 நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here