அரசு பள்ளி மாணவர்களே.., கோடை விடுமுறையில் சிறப்பான சலுகை.., முக்கிய அறிவிப்பு!!

0
அரசு பள்ளி மாணவர்களே.., கோடை விடுமுறையில் சிறப்பான சலுகை.., முக்கிய அறிவிப்பு!!
அரசு பள்ளி மாணவர்களே.., கோடை விடுமுறையில் சிறப்பான சலுகை.., முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 12ம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வெளியானது. அதுமட்டுமின்றி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை இன்று முதல் வருகிற மே 26ம் தேதி நடைபெற இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த முகாமின் மூலம் மாணவர்கள் குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம் மற்றும் மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழில்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு மற்றும் பல வகையான செயல்பாடுகளை கற்று கொள்வார்கள்.

பிரபல நடன இயக்குனரின் அடுத்த முயற்சி.., உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த உலகநாயகன்!!

அதன்படி இன்று கல்லுகுறிக்கியில் பாறை ஓவியங்கள், நாளை தளியில் கொய்மலர்கள் ஆராய்ச்சி மையத்திற்கும், மலர்கள் சாகுபடி குறித்து அறிந்து கொள்ளவும், 17ம் தேதி அசோக் லே லேண்ட் நிறுவனங்களுக்கும், ஓசூரில் உள்ள டைட்டான், 18ம் தேதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 19ம் தேதி பெங்களூரில் இருக்கும் பிரபல அருங்காட்சியகத்திற்கும், 22ம் தேதி மத்திகிரி கால்நடை பண்ணைக்கும், 24ம் தேதி அய்யூர் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு, 25ம் தேதி ஆண்டு மாவட்ட ஆட்சியருடன் தேநீர் விருந்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here