பிரபல நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மொத்த தொகையையும் வழங்க உத்தரவு! வெளியான அறிவிப்பு!!

0
பிரபல நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - மொத்த தொகையையும் வழங்க உத்தரவு! வெளியான அறிவிப்பு!!
பிரபல நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் - மொத்த தொகையையும் வழங்க உத்தரவு! வெளியான அறிவிப்பு!!

பிரபல நிறுவன ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள பிஎஃப் உள்ளிட்ட நிலுவை தொகையை உடனே செலுத்த வேண்டும் என தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அதிரடி உத்தரவு:

முன்னணி ஏர்வேஸ் நிறுவனமான ஜெட் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, திவால் நிலை தீர்வு நடைமுறையின் மூலம் முக்கிய செயல்பாடுகளை நிறுத்தியது. பின் இதன் ஏலத்தை ஜலான் கால்ராக் அணி வென்றது. இதையடுத்து இந்த விமான சேவை தற்போது மீண்டும் தொடங்க தயாராகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான ஜலான் கால்ராக், அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு இதுவரை செலுத்தப்படாத பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை உடனே செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த உத்தரவை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் “இந்த” மாவட்டத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை .,, DSP உத்தரவு!!

ஒரு மாதத்திற்குள் இவை அனைத்தையும் கணக்கிட்டு செலுத்தி முடிக்குமாறு, தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தொழிலாளர், விமான பராமரிப்பு பொறியாளர், அதிகாரி மற்றும் பணியாளர் சங்கம் ஆகியோர் செய்த மேல்முறையீட்டு மனுவை, கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட வைப்பு நிதி போக, மீதம் இருக்கும் தொகையை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here