தமிழகத்தில் “இந்த” மாவட்டத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை .,, DSP உத்தரவு!!

0
தமிழகத்தில்
தமிழகத்தில் "இந்த" மாவட்டத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை .,, DSP உத்தரவு!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

ஆண்டுதோறும் மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் 27 ஆம் தேதி காளையார் கோவிலில் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்களும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மருதுபாண்டியர் ஜெயந்தி நிகழ்ச்சியில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம், பாதுகாப்பு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் நடப்பு வருடம் சிவகங்கை மாவட்டத்தில், காளையார் கோயிலில் வரும் அக்.27 ஆம் தேதி மருது சகோதரர் குரு பூஜை நடைபெற உள்ளது. இதனால் சிவகங்கையில் நாளை (அக்.,23ம் தேதி) முதல் வரும் அக்.,31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்.

இந்தியாவில் நேற்று 2 லட்சத்திற்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதார அமைச்சகம் அறிக்கை!!

இவர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட இறுதி வரை போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here