ஆசிய கோப்பையை ரத்து செய்யுங்கள்…, ஜெய் ஷாவின் கருத்தால் ஐசிசியை எதிர்த்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!

0
ஆசிய கோப்பையை ரத்து செய்யுங்கள்..., ஜெய் ஷாவின் கருத்தால் ஐசிசியை எதிர்த்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!
ஆசிய கோப்பையை ரத்து செய்யுங்கள்..., ஜெய் ஷாவின் கருத்தால் ஐசிசியை எதிர்த்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!

ஆசிய கோப்பை தொடர் குறித்த ஜெய் ஷாவின் கருத்தால், பாகிஸ்தான் கொந்தளித்து வரும் நிலையில், ஐசிசியை எதிர்த்து தற்போது கேள்விகள் எழுந்து வருகின்றன.

IND vs PAK:

இந்திய அணி நாளை டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை அணியை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது. ஆனால், பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் வாரிய தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி வலம் வருகிறது. அதாவது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று கூறியிருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், இரு நாட்டுக்கும் பொதுவான ஒரு இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையில் பாகிஸ்தான் வராது என்று பதிலடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சகம், ஆசிய கோப்பையின் போது கோவிட் 19 பரவலாம். வேறு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி, பாகிஸ்தானுக்கு இந்தியா செல்வதற்கு வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளனர்.

NO.1 அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து.., அப்பப்பா என்ன ஒரு ஆட்டம்.., மிரண்டு போன ரசிகர்கள்!!

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் கோச்சுமான ஜாவேத் மியாண்டட், ஐசிசியின் பயன் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது போன்ற சர்ச்சைகளை பார்த்து கொண்டிருப்பதற்கு ஆசிய கோப்பையை ரத்து செய்யுங்கள், இல்லையென்றால் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துங்கள் என்று விமர்சித்துள்ளார். இவரது இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here