பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!

0
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!
பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டாலும் சீரியலுக்கு என்று தனி மவுசு இருக்க தான் செய்கிறது. அதன்படி பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீரியல்களின் மூலம் சரிந்திருந்த விஜய் டிவியின் TRB யும் உயர ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையை எடுத்துக் கொண்டால் ஒற்றுமையாக இருந்த குடும்பம் பலரது சூழ்ச்சியினால் இரண்டு துருவங்களாக பிரிந்து கிடக்கிறது. மறுபுறம் பாக்கியலட்சுமி சீரியலை பார்த்தால் பாக்கியாவை கழட்டி விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி ஜாலியாக வாழ்ந்து வருகிறார். இதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து என்னென்ன ட்விஸ்ட் வரப்போகுது என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது.

ஐடி ஊழியர்களுக்கு மஜா தீபாவளி – 10% சம்பள அதிகரிப்புடன் கிடைத்த பதவி உயர்வு! நிறுவனம் அறிவிப்பு!!

இந்நிலையில் இந்த சீரியல்கள் அனைத்தும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மறுஒளிபரப்பு அடுத்த நாள் காலை 12 முதல் 1 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த மறு ஒளிபரப்பு நேரம் மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியல் 4 முதல் 4.30 மணி வரையும், பாண்டியன் ஸ்டோர் சீரியல் 4:30 முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது இதனால் இல்லத்தரசிகள் இந்த நேரத்தை தவற விடாமல் இரு சீரியல்களையும் கண்டு களியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here